Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித் துறையின், புதிய இயக்குனராக, கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனராக இருந்தவர், ராமேஸ்வர முருகன். ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வில், பல இடங்களில் பிரச்னைகள் எழுந்தன.
இது தொடர்பாக, ராமேஸ்வர முருகன், போதுமான முன்னேற்பாடுகள் செய்ய வில்லை. முறைகேடு கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த, கண்ணப்பன் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவுகளை, பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்து உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement