Ad Code

Responsive Advertisement

'ஒதுங்க' இங்கே இடமில்லை; ஊருக்கு தான் உபதேசம்

மதுரையில் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்கும் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) அலுவலக வளாகத்தில் 'ஒதுங்குவதற்கு' இடமில்லாமல் ஆசிரியர்கள்- 

ஊழியர்கள் புலம்புகின்றனர்.மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் மாவட்ட கல்வி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மண்டல தணிக்கை என பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர பணி நிமித்தமாக ஆசிரியர்கள், அலுவலர்கள், மக்கள் என தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சி.இ.ஓ., அலுவலகம் பின் பகுதியில் உள்ள சிறிய கழிப்பறையை தான் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் பயன்படுத்துகின்றனர்.மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ்.ஏ., அலுவலகங்களுக்குள் மட்டும் சிறிய கழிப்பறை உள்ளன. ஆனால் இந்த அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக வந்து செல்வோருக்கு அவசரத்திற்கு 'ஒதுங்க' ஒரு கழிப்பறை வசதி கூட இல்லை.அரசு பள்ளிகளுக்குகெல்லாம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அலுவலகங்கள் இங்கு செயல்பட்டும் கழிப்பறைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.இத்திட்டங்கள் சார்பில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மாதந்தோறும் பல்வேறு பயிற்சி முகாம்கள் இங்கு நடக்கின்றன. பயிற்சிக்கு வந்துசெல்லும் ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக மாறிவருகிறது. எனவே இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி மேற்கொள்ள அதிகாரிகள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement