Ad Code

Responsive Advertisement

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா: நாளை நடைபெறுகிறது...

2014 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் மலாலா ஆகியோருக்கு நாளை வழங்கப்படுகிறது. மனித உரிமை ஆர்வலர்களான இருவரும் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்ததற்காகவும், அவர்களின் உரிமைக்காக பாடுபட்டதற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்தது. தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.


பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய 17 வயது பெண்ணான மலாலா துப்பாக்கியால் சுடப்பட்டார். மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின் உயிர் பிழைத்து, பெண்களின் கல்விக்காக போராடி வருகிறார். இவர்களின் இந்த முயற்சியை பாராட்டும் வகையிலேயே இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த பரிசை வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெறுகின்றது.

கைலாஷ் சத்யார்த்தி மற்றும் யூசுப் சாய் மலாலா ஆகியோருக்கு ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் நோபல் பதக்கங்கள், பட்டயங்கள் மற்றும் பரிசுத்தொகையான 11 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கான உறுதிப்பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.
    
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் இந்த தொகையை பெற்றுக்கொள்ளும் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் ஆகியோர் தலா 5.5 லட்சம் டாலர்களாக பணத்தை பிரித்துக்கொள்வார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement