Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பெற்றோர்களிடம் நீதிபதி இன்று விசாரணை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில்  ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி,  ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நலைப்பள்ளிகள் ஒரே கட்டிடத்தில்  இயங்கியது. 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94  குழந்தைகள் இறந்தனர்.
இந்தவழக்கில் பள்ளி நிறுவனர் புலவர்  பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு  சிறைதண்டனையும் விதித்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், கூடுதல் இழப்பீடு கேட்டு  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து  பரிசீலனை செய்ய ஒருநபர் ஆணையத்தை நீதிமன்றம் அமைத்தது.  ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு  கும்பகோணத்துக்கு இன்று வந்து விசாரணை நடத்துகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement