ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் ஆகியோர் கல்வி ஊக்கத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.
பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
அரசு விடுதிகள் அல்லாமல், கல்லூரி விடுதிகளில் தங்கி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500-ம், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8000-ம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதனைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தோர் இந்த ஊக்கத் தொகையைப் பெற, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை