புதுக்கோட்டை அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 3 மகன், 2 மகள். கடைசி மகள் அன்னப்பழம்(12), அங்குள்ள நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.
நன்றாக படிக்கும் மாணவி, கடந்த 10 நாட்களாக சரியாக படிக்கவில்லை. இதனால், வகுப்பு ஆசிரியை பெற்றோரை வரவழைத்து புகார் தெரிவித்துள்ளார். பெற்றோரும் மகளிடம் நன்கு படிக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல அன்னப்பழம் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டாள். ஆனால், பள்ளிக்குள் செல்லாமல், எதிரே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் பின்புறம் சென்று தான் பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலிலும், தலையிலும் ஊற்றி தீவைத்து கொண்டாள். இதில், உடல் கருகி அதே இடத்தில் இறந்தாள். இதுகுறித்து புதுக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை