Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு 3 சான்றிதழ்: விரைந்து வழங்க அரசு உத்தரவு

பள்ளிகள் மூலம், ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மாணவர்கள், அரசின் இலவச திட்டங்களை பெறவும், பிற பயன்பாடுகளுக்காகவும், ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்று பெற, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இதை பெறுவதில், கால தாமதம், லஞ்சம் என, பல பிரச்னைகள் எழுந்ததால், பள்ளிகள் மூலமே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமையாசிரியர் மூலம், தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. விசாரணைக்கு, கால தாமதம் ஆவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னையை, நேரடியாக, மாவட்ட கலெக்டர்களிடம் கொண்டு சென்று, சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement