Ad Code

Responsive Advertisement

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்


பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

பி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.

கல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.

இதுவரை ஆசிரியர் ஆகும் முன்பாக, பட்டப்படிப்பு படித்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி பெறுவார்கள். பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பி.எட். படிப்பு மற்றும் எம்.எட். படிப்பு காலம் தலா ஒரு வருடம் தான்.

ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அதற்காக பயிற்சி காலத்தை 2 வருடமாக்கவேண்டும் என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பு 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

வருகிற கல்வி ஆண்டில் ...

மாணவர்களின் கல்வித்திறனை மேலும் அதிகரிப்பதற்காக ஆசிரியர்களின் பயிற்சி காலத்தை 2 வருடமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இதை வருகிற கல்வி ஆண்டில் (2015-2016) அமல்படுத்துகிறோம்.

மேலும் தமிழக அரசின் அனுமதி பெறுவதற்காக ஏற்கனவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சிண்டிகேட் அனுமதி மற்றும் தமிழக அரசின் அனுமதிக்கு வைக்கப்பட உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் இந்த பி.எட். படிப்புக்கும், எம்.எட். படிப்புக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement