Ad Code

Responsive Advertisement

இன்று முதல் 21-ஆம் ஆண்டு பாரதி திருவிழா

வானவில் பண்பாட்டு மையம் சார்பில், 21-ஆம் ஆண்டு பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் முகப்பில் வியாழக்கிழமை (டிச.11) காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில் சால்வை, பொற்பை வழங்கி ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைக்கிறார்.

பின்னர், காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாரதியாருக்கு சமர்ப்பித்த சால்வை, பொற்பை ஆகியவற்றை ரா.பா.சாரதிக்கு வழங்குகிறார் தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன்.

டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழறிஞர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குகிறார்.

இதேபோன்று கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடபெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement