Ad Code

Responsive Advertisement

தொலைநிலைக் கல்வி முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகள்: டிச.20-இல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான டிசம்பர் மாதத் தேர்வுகள் வருகிற 20-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

தொலைநிலை கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ். ஆகிய படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வுகள் வருகிற 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுகள் அனைத்தும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2015 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் தொலைநிலைக் கல்வி இணையதளமான  www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாதிரி கேள்வித் தாள்களும் இதில் இடம்பெற்றிருக்கும். தேர்வு நுழைவுச் சீட்டையும் தேர்வர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement