Ad Code

Responsive Advertisement

PGTRB : முதுநிலை பட்டதாரி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான  விண்ணப்பம், வரும் 10ம் தேதி முதல் நந்தனம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  தெரிவித்துள்ளார். அரசு மேனிலைப் பள்ளிகளில் 2013-14 மற்றும் 2014- 15ம் ஆண்டுகளில் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி  ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர்  தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்  அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், 10ம்  தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு  வாரியத்தால் நடத்தப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி  எழுத்து தேர்வு 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள்  வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நந்தனம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் 26ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள்  வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement