Ad Code

Responsive Advertisement

பள்ளியில் போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணியின் போது மதுபோதையில் இருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கடந்த நவ.6ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.சீமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தலைமை ஆசிரியர் ஏ.பாபு மதுபோதையில் இருந்ததோடு, கடந்த அக்.28ஆம் தேதி முதல் நவ.5ஆம் தேதி வரை பள்ளிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.சீமான் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement