Ad Code

Responsive Advertisement

FA ACTIVITIES...8th STD ENGLISH...

AFTER THE STORM!

AFTER THE STORM! எட்டாம் வகுப்பு, ‘AFTER THE STORM’ பாடத்துக்காக, காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் ஒரு செயல்பாடு செய்தோம். மாணவர்களுக்கு, தலையில் கிரீடம் போன்ற ஒன்றை சார்ட் அட்டையில் செய்து சூட்டினோம். ஒவ்வொரு கிரீடமும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பதாக அமைத்துக்கொண்டோம். மரங்கள், சந்தோஷமாகத் தன் கிளைகளை அசைத்துப் பாடுவதுபோல மாணவர்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடினர். அப்போது, அங்கு வந்த கோடரிக்காரர்களைப் பார்த்து அச்சப்பட்டு, மரங்கள் தங்களுக்குள் பேசுவது போல, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். பிறகு, கோடரிக்காரர்களிடம் மரங்களை வெட்டாமல் விட்டும்படி கேட்டார்கள். ஆனால், கோடரிக்காரர்கள் ஒரு மரத்தை வெட்டினார்கள். அது, அழுதுகொண்டே வீழ்வது போல நடித்தனர். இந்த நடிப்புச் செயல்பாட்டின் மூலம், மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிவதோடு, ஆங்கில உரையாடலை வளர்த்துக்கொண்டனர். இதுபோல நீங்களும் செய்யலாம். மாணவர்களின் ஆர்வம், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீடு அளிக்கலாம். 


- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி,.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement