Ad Code

Responsive Advertisement

தொழில்நுட்ப தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை

கடந்த மே மாதம் நடைபெற்ற தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள், தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி அளிப்பது குறித்த விவரங்களை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்க நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனு:

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் ஓவியம், தையல், இசை, நெசவு பாடப்பிரிவிற்கான தேர்வு கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெறவில்லை.


இந்நிலையில், கடந்த மே 19 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை மேற்கண்ட தொழில்நுட்ப பிரிவுகளுக்கு அரசு தேர்வுத்துறை மூலமாக தேர்வு நடைபெற்றது.

இதில், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு  கோவை தேவாங்கார் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு வணிகவியல் தொழில் நுட்பவியல் தேர்வு முடிவுகள் கூட கடந்த அக்டோபர் 24- ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால், ஒவ்வோர் பாடப்பிரிவிலும் பங்கேற்ற 14,373 பேர் குறித்த தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதேபோல் அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் வெற்றிப்பெற்ற பின் பள்ளி இயக்குநர் மூலம் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும். இந்த தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி கடந்த 2007- ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில்நுட்பத் தேர்வில் மட்டும் பங்கேற்றவர்களில் 55 ஆயிரம் பேர் இப்பயிற்சிக்காக காத்திருக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள், தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி  குறித்த தகவல்களை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement