Ad Code

Responsive Advertisement

வாசிப்புத் திறனை மேம்படுத்தி வசமாக்குவோம் மதிப்பெண்களை...

படிக்க வேண்டும் என்று நினைத்த உடன், முதலில் விட வேண்டியது உங்கள் கூச்சத்தை. எழுத்தைக் கூட்டிப் படிக்க வெட்கப்படத் தேவை இல்லை. உங்கள் பாடப் புத்தகத்தைத் தவிர, வண்ண வண்ணப் படங்கள் கொண்ட புத்தகங்களைப் பாருங்கள். பார்க்கப் பார்க்கப் புத்தகங்கள் உங்களை ஈர்க்கும். சிறுவர் புத்தகங்களில் வரும் 'ஜோக்ஸ்' பகுதியைப் படியுங்கள். சிரித்து மகிழும்போது, புத்தகத்தின் மீது ஆர்வம் வரும். 

ஆசிரியர்களிடம் உதவி கேட்கத் தயங்கவே வேண்டாம். ஆங்கிலம் படிக்க, இரு எழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள் என்று படிப்பதுடன், பார்த்த உடன் படிக்கக்கூடிய sight words படியுங்கள். ஆங்கில எழுத்துகளின் ஒலியைப் படிப்பது, பெரிய பெரிய வார்த்தைகளை நீங்களே எழுத்துக் கூட்டிப் படிக்க உதவும். ஒரு வார்த்தையை நீங்கள் முயற்சிசெய்து படித்தவுடன், உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். உற்சாகமாக இருப்பது படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும். அன்று படித்த வார்த்தைகளை அன்றே எழுதிப்பார்த்து விடுங்கள். தினமும் 10 வார்த்தைகள். திங்கள் முதல் வெள்ளி வரை 50 வார்த்தைகள். வார இறுதியில் அந்த 50 வார்த்தைகளையும் வாய்விட்டுப் படித்து, எழுதிப் பாருங்கள். நன்கு தயார்ப்படுத்திக்கொண்டு, அடுத்த வாரத்துக்குச் செல்லுங்கள்.

வகுப்பில் வார்த்தைகளை வைத்து, 'மெமரி கேம்' விளையாடலாம். வரிசையில் ஒருவர், ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் ஸ்பெல்லிங் சொல்லவேண்டும். அடுத்தவர், முதல் வார்த்தையுடன் தன் வார்த்தையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இப்படியே வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் சொல்ல, அந்த மாணவனைப் பார்க்கும்போது, அவன் சொன்ன வார்த்தையும் அதன் ஸ்பெல்லிங்கும் ஞாபகம் வரும். 

மறுநாள், இரண்டாவது வார்த்தை. இந்த முறையில் வார்த்தைகளும் பழகும், ஞாபகசக்தியும் வளரும். தொலைக்காட்சி பார்க்கும்போது, விளம்பரங்களைப் படிக்கவும் அதன் உச்சரிப்பைக் கவனித்து, பார்த்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை எழுதிப்பாருங்கள். இப்படியாக செய்து வாசிப்பு திறனை மேம்படுத்தினால் தேர்வு சமயத்தில் எளிதாக மதிப்பெண்களை குவிக்க முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement