Ad Code

Responsive Advertisement

பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்

அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பேராசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் நிரப்பியாக வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பல பல்கலைக்கழகங்களில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், இவற்றில் சில அந்தக் காலியிடங்களில் பகுதி நேர அடிப்படையில் தாற்காலிகப் பேராசிரியர்கள் நியமித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், தாங்கள் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை என்பதால் ஒதுக்கப்பட்ட பாடத்தை மட்டும் நடத்திவிட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொள்வர். துறை ரீதியாக தங்களைத் தாங்களே சுய மேம்பாடு செய்துகொள்வதிலும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் சற்றும் தாமதிக்காமல் பத்திரிகை விளம்பரம் முலமும், பல்கலைக்கழக இணையதளத்தின் மூலமாகவும் விளம்பரப்படுத்தி காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உரிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதிவாய்ந்த முழுநேரப் பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழகங்கள் நிரப்ப வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement