Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திங்கள்கிழமை (நவ.10) மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவற்றுக்காக இதுவரை சுமார் 18 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

வரும் ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் பட்டியலைத் திருத்தும் பணிகள் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

மாநிலம் முழுவதும் அக்டோபர் 26, நவம்பர் 2 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement