Ad Code

Responsive Advertisement

அஞ்சல் மூலம் காந்தியக் கல்வி

சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் சார்பில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து காந்தி கல்வி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி குறித்து தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இதனை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் படிக்கலாம். இதில் சேர்பவர்களுக்கு பயிற்சி ஏடுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது வரம்பு கிடையாது.

வரும் 2015-ஆம் ஆண்டு, ஜனவரி 30-இல் தேர்வு நடைபெறும். தேர்வு எழுத்த விரும்புவோர் வரும் ஜனவரி 10-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்ச்சி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு பயிற்சி கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ.200 மட்டுமே. இதனை "GANDHI STUDY CENTER' என்ற பெயரில் பண விடை (மணி ஆர்டர்) அல்லது வங்கி வரைவோலையாக (டிமான்ட் டிராப்ட்) "கெளரவ இயக்குநர், காந்தி கல்வி நிலையம், 58, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை-17' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-24340607, 24346549 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement