Ad Code

Responsive Advertisement

தேசிய திறனாய்வுத் தேர்வு: ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் ஆயிரம் பேருக்கு போட்டித் தேர்வு நடத்தி உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டத் தேர்வு தமிழகம் முழுவதும் 350 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திறனறித் தேர்வு, படிப்புத் திறன் தேர்வு என இரண்டு தாள் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்காக 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககமே வெளியிடலாம். ஆனால், முடிவுகளை வெளியிடுவதற்கு முன் தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சிலின் ஒப்புதல் பெறப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டத் தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சில் சார்பில், இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இரண்டு கட்டடங்களிலும் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது மாதம் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்பின்போது வழங்கப்படும் உதவித் தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement