அரசின் புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டு வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியை விரைவில் தொடங்கவுள்ளோம். கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு, 7 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் அதை உருவாக்குவார்கள். இப்பணியில் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரையும் ஈடுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலமானது, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்கள் கைகளில்தான் உள்ளது. இந்த கருத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக தெரிவிக்கவில்லை. சிபிஎஸ்இ பள்ளிக்குச் செல்லும் 2 குழந்தைகளின் தாய் என்ற முறையில் தெரிவிக்கிறேன். தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர், அங்கு தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதையே விரும்புகின்றனர்.
நாட்டின் தலைவிதியானது நீண்டகாலமாக அரசியல்வாதிகளின் கையில் சிக்கியிருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து விடுபட்டு, வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, நாட்டை வளப்படுத்த வேண்டும். இந்தப் பணியை அரசால் மட்டும் செய்ய முடியாது. இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாற்றத்தை கொண்டு வரும் பணியின் வாகனமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்றார் அவர்.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை