Ad Code

Responsive Advertisement

பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக, உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த, 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
குறைந்த சம்பளம், நீண்டதுார பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்து விட்டனர். 2,000 பணியிடம், காலியாக உள்ளது. தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கான சம்பளத்தை, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை.இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், கல்வித்துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.அதையடுத்து, சபிதா வெளியிட்ட உத்தரவில், 'அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும், கடந்த ஏப்., முதல், 7,000 ரூபாய் சம்பளம் என கணக்கிட்டு, நிலுவை தொகையுடன் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement