Ad Code

Responsive Advertisement

அண்ணாமலை பல்கலை 2 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் பணி நீக்கம்

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ல் தமிழக அரசு எடுத்துக் கொண்டது.  இந்நிலையில் முறைகோடாக பதவி உயர்வு பெற்றவர்கள், போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆகியோர் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விசாரணையும் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் முறைகேடாக பதவி உயர்வு பெற்றிருப்பதும், 100க்கும் மேற்பட்டோர் போலிசான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்ததாக திருவண்ணாமலை ஸ்டெடி சென்டரில் தனிஅலுவலராக இருந்த செந்தில்குமார் பல்கலை நிர்வாகத் தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்ததாக உதவி பேராசிரியர் 2 பேருக்கும், ஊழியர்கள் 4 பேருக்கும் பல்கலை நிர்வா கம் பணி நீக்க உத்தரவை நேற்று அனுப்பியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement