நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா கூறினார். பள்ளி கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது:
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்யும் வகையில் காலியாக இருந்த 76,338 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு, இதுவரை 72,557 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, ஆசிரியர் அல்லாத 15,820 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இதுவரை 8,881 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முழுமையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டியது.
அதன் காரணமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவ, மாணவிகள், 2014-15 கல்வியாண்டில் 89,941 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசின் சார்பில் தமிழகத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
விழாவில் முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை