தமிழகம் முழுவதும், 44 மையங்களில் நடந்த குரூப் - 2 தேர்வில், 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னை, மறைமலை நகர் அருகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், கம்ப்யூட்டர் இயங்காததால், 40 பேர், தேர்வை எழுதவில்லை. அவர்களுக்கு, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை, மறைமலை நகர் அருகே சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், 300 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 270 பேர் வந்தனர்; 30 பேர் வரவில்லை.அந்த மையத்தின் ஒரு அறையில், 40 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீரென, கம்ப்யூட்டர் இயங்காததால், அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மறுதேர்வு:
இது குறித்து, தேர்வாணைய தலைவருக்கு, அலுவலர்கள் தகவல் அளித்தனர்; பின், இரு வேளை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இன்று, இதே மையத்தில், 40 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வர் போராட்டம்:
சட்டமங்கலத்தில் கம்ப்யூட்டர் கோளாறு ஏற்பட்டதும், மையத்திற்கு எதிரே, தேர்வர், போராட்டம் நடத்தினர்.அவர்கள் அனைவரும், இன்று, தேர்வு எழுதவும், தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்த பின், பகல் 2:30 மணிக்கு, தேர்வர், போராட்டத்தை கைவிட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை