Ad Code

Responsive Advertisement

TNPSC - அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர் பட்டியல் வெளியீடு

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய அறிவியல் உதவியாளர் நிலை2 பதவியில் 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஜூன் 2ம் தேதியும், நேர்காணல் செப்டம்பர் 18, 19ம் தேதியும் நடந்தது.இந்த தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட தேர்வு பட்டியல் தேர்வாணைய இணையதளம் மற்றும் தேர்வாணைய அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement