Ad Code

Responsive Advertisement

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) டி.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இப் பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறைக்கு முதுநிலை பாடம் கற்பிக்க தாற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. தாவரவியல், தாவர உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம் (தாவர அறிவியல் சிறப்பு பாடத்துடன்) இவற்றில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம், நெட், ஸ்லெட், எம்.பில், பி.எச்டி, தகுதி இருத்தல் வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இம் மாதம் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெறும் நேர்முகத் தேர்வில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

முதுநிலை பட்டத்துடன் முனைவர் பட்டம், தேசிய, மாநில அளவில் தகுதிகாண் தேர்வு பெற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரமும், முதுநிலை, இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே கடந்த 16-7-2014 இல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement