Ad Code

Responsive Advertisement

சென்னை CEO சஸ்பெண்ட்

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி.இ.ஓ., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

இதில், தமிழக அரசுக்கு, பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு, அப்போது, முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த, ராஜேந்திரன் தான் பொறுப்பு என்றும் கூறி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
கல்வித்துறை செயலர் சபிதா, ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து, உத்தரவு பிறப்பித்ததை, அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ஓரிரு நாளில், பக்கத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒருவரிடம், சென்னை மாவட்ட பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement