Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கு ரூ . 247 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வரும் 210 அரசு மேனிலைப் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 210 அரசு மேனிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட உள்ளன.

இதற்காக நபார்டு வங்கி கடன் உதவியுடன் ரூ.247 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.149 கோடியே 34 லட்சம் நபார்டு வங்கியும், ரூ.98 கோடியே 41 லட்சம் அரசின் பங்கு. இந்த தொகையில் 210 மேனிலைப் பள்ளிகளில் 1335 வகுப்பறைகள், 184 ஆய்வகங்கள், 603 கழிப்பறைகள், 50 ஆயிரத்து 110 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் 2014&2015ம் ஆண்டில் முடிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement