Ad Code

Responsive Advertisement

பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்த பள்ளி ஆசிரியைகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவிகளுக்கு, ஆசிரியைகள் கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கம்மவார் பள்ளியில் பெண்குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பரமசிவன் தலைமை வகித்தார். பயிலும் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை விக்னேஷ்வரி வரவேற்றார். சப்- கலெக்டர் கார்த்திகேயன் மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி. நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின், ஆசிரியைகள் மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் 'பெண்குழந்தைகளை காப்போம்,' என உறுதி மொழிஎடுத்துகொண்டனர். பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement