''தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலி பணியிடங்கள் உள்ளது,'' என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கடந்த 1982 முதல் 31 ஆண்டுகளாக வி.ஏ.ஓ., க்களாக பணியாற்றிய 400 பேருக்கு சிறப்பு ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார் என பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 613 வி.ஏ.ஓ., பணியிடங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஓய்வின் அடிப்படையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து வருகிறது. 4 ஆண்டு பணி மூப்பு உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு ஒதுக்கீட்டை 60 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து வி.ஏ.ஓ., க்களுக்கும் ஒரே மாதிரியான பதவி அதிகாரம் வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உத்தரவு விதிமீறல் அதிகாரத்தை முறைப் படுத்த வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வழங்குவது போல், கூடுதல் பணிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும். இதர துறை ஊழியர்களுக்கு வழங்கியது போல் தேர்தல் பணி சிறப்பு ஊதியம் வி.ஏ.ஓ.,க்களுக்கும் வழங்க வேண்டும். சங்க பிரதிநிதிகளுடன் அரசு கூட்டு கலந்தாய்வு நடத்தி, பிரச்னைகளை களைய வேண்டும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை