Ad Code

Responsive Advertisement

முறையான பயிற்சி இருந்தால் அதிக மதிப்பெண் உறுதி! : 'தினமலர்' ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆலோசனை

 'முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்,' என மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடந்த 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவதற்காக டி.வி.ஆர்., அகாடமி 'தினமலர்' கல்விமலர் சார்பில் நிகழ்ச்சி மதுரையில் நேற்று துவங்கியது.

காலை பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் மாணவர்களுக்கு நடந்த நிகழ்வு

ஆதிஞானகுமரன்(ஆங்கிலம்)ஆசிரியர், சேதுபதி மேல் நிலைப் பள்ளி, மதுரை: திட்டமிட்டு படித்தால் ஆங்கிலம் மிக எளிது. மனப்பாடம் மற்றும் இலக்கணத்தில் இடம் பெறும் பகுதியை எழுதி பார்க்கலாம். முதல் ஐந்து பாடங்களை முழுமையாக படித்தால் ஒரு மார்க், 2 மார்க் மற்றும் 5 மார்க் பகுதி வினாக்களை எழுதலாம்.

கிறிஸ்டோபர் ஜெயசீலன்(கணிதம்) தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, திருப்பாலை: 
ஒரு மார்க் பகுதியில் முழு மதிப்பெண் பெற முயற்சிக்க வேண்டும். அப்போது 'சென்டம்' எளிது. முதல் நான்கு பாடங்களை படித்தால் 60 மதிப்பெண் உறுதி. கூட்டல், கழித்தல் எழுதுவதை விடைத்தாளின் ஓரத்தில் எழுதலாம். கிராப் மற்றும் ஜாமெட்ரி தெளிவாக இருந்தால் 20 மதிப்பெண் உறுதி.

பாலாஜி(அறிவியல்) தாசில்தார், சென்னை: 
'புக்பேக்' வினா, பெற்றோர் ஆசிரியர் கழக புத்தகம் மற்றும் எட்டு ஆண்டுகளாக வெளியான அரசு வினா வங்கி புத்தக வினாக்களை படிக்க வேண்டும். 'புளுபிரின்ட்' தெரிந்திருக்க வேண்டும். விலங்கியலில் 1, 2, வேதியியலில் 10, 13ம் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
காந்திமதி (சமூக அறிவியல்)ஆசிரியை, அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, ஒத்தக்கடை: 'புளுபிரின்ட்'படி திட்டமிட்டு பாடங்களை படிக்க வேண்டும். 'புக்பேக்'கில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வரலாறில் முதல் 5 பாடங்கள், புவியியலில் முதல் 6 பாடங்களில் இருந்து 4 ஐந்து மார்க் கேள்விகள் மற்றும் ஒரு மார்க் பகுதியில் அதிக வினாக்கள் இடம்பெறும்.

மதியம் ஆங்கில மீடியம் மாணவர்களுக்கான நிகழ்வு

ஜான்சிராணி(சமூக அறிவியல்)ஆசிரியை, டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, மதுரை: தேர்வை பிழையின்றி எழுத வேண்டும். 1921 முதல் 1950 வரையான நிகழ்வுகளை படித்திருக்க வேண்டும். ஆசியா மேப், உலகம் மற்றும் தேசிய அளவில் எந்த பகுதியில் என்ன இயற்கை வளங்கள் கிடைக்கின்றன என்ற விவரத்தை தெரிந்திருக்க வேண்டும்.

புவனேஷ்பாபு(கணிதம்) ஆசிரியர், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை: கணிதத்தில் மொத்தம் 12 பாடங்கள் உள்ளன. பகுதி 1ல் 15 ஒரு மார்க் கேள்விகள், பகுதி 2ல் 10 இரண்டு மார்க் கேள்விகள், ஐந்து மதிப்பெண் பகுதியில் 9 கேள்விகள் இடம் பெறும். மொத்தம் 167 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். முதல் ஐந்து பாடங்களை முழுமையாக படித்தால் 90 சதவீதம் மதிப்பெண் பெறலாம்.

பழனிவேல்ராஜன் (ஆங்கிலம்) ஆசிரியர், சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை: சரியான பொருள் தருக மற்றும் எதிர்ச்சொல் தருக பகுதியில் இடம் பெறும் வினாக்கள் பெரும்பாலும் 'புக்பேக்'கில் கேட்கப்படும். மனப்பாட பகுதியை பிழையின்றி அடிக்கடி எழுதிப் பார்க்க வேண்டும். முதல் மூன்று அல்லது கடைசி மூன்று பாடங்களை படித்தால் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.

கணேசன்(அறிவியல்)சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை: 
அறிவியலில் 12 பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். இதில் மட்டும் 11 ஒரு மார்க் கேள்வி, 22 இரண்டு மார்க் கேள்வி, 7 ஐந்து மார்க் கேள்விகள் இடம்பெறும். பயாலஜி, தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியலில் 50 சதவீதம் வரை மிக எளிமையாக வினாக்கள் இடம் பெறும்.

அமுதா(தன்னம்பிக்கை)தலைமையாசிரியை, அரசு மேல் நிலைப் பள்ளி, பரவை: மாணவர்களுக்கு அவரவருக்கு பிடித்த இறை நம்பிக்கை வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை கிடைக்கும். தனித்தன்மையை குறைத்து மதிப்பிட வேண்டாம். எண்ணுவதை உயர்வாக எண்ண வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கூடாது. முடியும் என நம்ப வேண்டும்.

மதுரை ராஜ்மஹால், மீனாட்சி பேன் ஹவுஸ், சூலப்புரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பூர்விகா மொபைல் வேர்ல்டு நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. பங்கேற்றவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.

இன்று பிளஸ் 2 : பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement