Ad Code

Responsive Advertisement

என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்

 மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்' என்ற, புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை. ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை துவக்கியுள்ளன.

ஆன்லைன் அடிப்படையிலான, இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் இயக்குனர் ஆனந்த் துவக்கி வைத்தார். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அதற்கு மேல், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், தங்கள் தனித்திறன், குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை, இதற்கான படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்களுக்கான எதிர்காலத்தையும்,வாய்ப்பு
களையும் தீர்மானிக்கலாம். இந்த படிவம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என, அனைத்து மொழிகளிலும் இடம் பெற்றுள்ளது. இந்த, 'என் தேர்வு, என் எதிர்காலம்' தொடர்பான படிவம், ஒரு மாதத்திற்கு, இலவசமாக, www.btechguru.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த படிவம், ஆராய்ச்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுளளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கணேஷ் கூறியதாவது: பிளஸ் 2, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்கள், இந்த படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால், அவர்களுக்கான எதிர்காலம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பட்சத்தில், பெற்றோருக்கும், இளம் தலைமுறையினருக்கும் இடை யிலான முரண்பாடு புலப்படும்; பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
இளம் தலைமுறையினர், தங்கள் தனித்திறனை அறிந்து அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க இது பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். துவக்க நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., சென்னை பேராசிரியர்கள் நாகராஜன், கமலநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement