Ad Code

Responsive Advertisement

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? இந்தியாவின் முதல் தீயணைப்பு பெண் அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என இந்தியாவின் முதல் தீயணைப்பு பெண் அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விபத்தில்லா தீபாவளி

தீபாவளி பண்டிகையின் போது பள்ளி மாணவர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் கூடுவாஞ்சேரி அருள்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

இதில் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரியும், தமிழக வடக்கு, மேற்கு மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனருமான மீனாட்சி விஜயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.

மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? என்பதையும் செய்து காட்டினார்கள். பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி மீனாட்சி விஜயகுமார் பேசியதாவது:-

சீன பட்டாசு வேண்டாம்

பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கி தரவேண்டாம். மாணவர்கள் அப்துல்கலாம் சொன்னது போல பெரிய அளவில் கனவு காண வேண்டும். அப்போதுதான் நம் இந்தியாவுக்கு அப்துல்கலாம் போன்ற பல விஞ்ஞானிகள் உருவாக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி மனோகரன், துணை அதிகாரி பாஸ்கரன், நிலைய அதிகாரி விவேகானந்தன், பள்ளி தாளாளர் நீலன்அரசு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பா.சம்பத்குமார், தலைமை ஆசிரியர் பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement