ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).
இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.
இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.
தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை