Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் மாநில பொதுக்குழு - நிகழ்வுகள்

26/10/2014 அன்று ஞாயிற்று கிழமை வேலூர் மாவட்டம் ஆம்பூரில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழு நடைபெற்றது. வேலூர் மாவட்ட பேரவை பொறுப்பாளர்கள்  பொதுக்குழுவின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மாவட்டத்தலைவர் திரு.ராபர்ட் ஜோயல், மாவட்டச் செயலாளர் திரு.சரவணன், மாவட்டப் பொருளாளர் திரு.திரு.பிரான்சிஸ் பிரேம்குமார், பேர்னாம்பட் வட்டார செயலாளர் திரு.குமரேசன், பேர்னாம்பட் வட்டார பொருளாளர்.திரு.சந்திரன்   ஆகியோர் நிகழ்ச்சிகான அனைத்து  ஏற்பாடுகளையும் கடந்த இருவாரங்களாக இரவுபகல் பாராமல் உழைத்து ஏற்பாடு செய்து தந்தனர்.  காலை 10.00 மணியளவில் பொதுக்குழு துவங்கியது.  புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டி  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஆம்பூர் நகர தேவாலய பாதிரியார் திரு.கிளட்சன் பிரேம் குமார் அவர்கள் கலந்துக்கொண்டு  மக்களின் முதல்வர்  புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் விரைவில்  மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என ஜெபம் செய்தார். 


மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.  மாநில இணைப் பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ண மூர்த்தி  அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ்  அவர்கள் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  இயக்க வரலாறு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை  விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாநில சிறப்பு ஆலோசகர்  திரு.முகமது இஸ்மாயில் கருத்துரை வழங்கினார். பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து நிர்வாகிகள் கலந்துரையாடி தீர்மானங்களை முடிவு செய்தனர். அத்தீர்மானங்களை நிர்வாகிகள் பொதுக்குழுவில் விவாதித்து ஒருமனதாக நிறைவேற்றினர். பொதுக்குழுவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வேலூர் மாவட்ட   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது 


தீர்மானங்களின் நகல் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள், மதிப்புமிகு.கல்வித்துறை செயலாளர்  அவர்கள், உயர்திரு.பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள்,  உயர்திரு.தொடக்கல்வி  இயக்குனர் அவர்கள்,    
ஆகியோருக்கு பணிந்து அனுப்பப்பட்டது.மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா. அவர்கள்   நன்றியுரை  வழங்கினார். நிர்வாகிகள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் மதிய உணவு உபசரிப்பு அளிக்கப்பட்டது. 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement