Ad Code

Responsive Advertisement

இன்று முழு சந்திர கிரகணம்

இந்திய நேரப்படி இன்று பிற்பகல், ?:?? மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது. தாம்பரம் வானவியல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய நேரப்படி, இன்று பிற்பகல், 1:44 மணிக்கு, புறநிழல் சந்திர கிரகணம் துவங்கி, பகல் 2:44 மணி அளவில், நிஜநிழல் சந்திர கிரகணமாக பிரவேசிக்கிறது. மாலை 4:25க்கு, சந்திர கிரகணம் உச்சகட்டத்தை அடைகிறது.
சென்னையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின், 10 நிமிடங்கள் மட்டுமே, மாலை 6:04 வரை, நிஜநிழல் கிரகணம் தெரியும். பின் புறநிழல் கிரகணம், இரவு 7:5? வரை தெரியும். சென்னையில் சந்திர உதயம் மாலை 5:54 மணி. சூரிய மறைவின் போது, அடிவானில் மேகமூட்டம், வளிமண்டல ஒளிச்சிதைவு, ஈரப்பதம் காரணமாக நிஜ கிரகணத்தினை காண்பது சிரமம். ஆயினும் புறநிழல் கிரகணத்தை காணலாம். (சந்திரனின் ஒளி சற்று மங்கலாக இருக்கும்). அதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம். இதை சென்னை கடற்கரையில் பார்க்க வாய்ப்புண்டு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement