Ad Code

Responsive Advertisement

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அமைச்சரிடம் வலியுறுத்தல்

தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், துறை அமைச்சரை சந்தித்து, 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தினர். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடைசியாக பெற்ற சம்பளத்தில், 60 சதவீதம் அல்லது குறைந்தபட்சம், 3,500 ரூபாய், ஆகிய இரண்டில், அதிகமானத் தொகையை, ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
அங்கன்வாடி குறு மையங்களை, முதன்மை மையங்களாக மாற்றம் செய்து, அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராடி வருகின்றனர். நேற்று, அந்த அமைப்பின் நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி, துறை செயலர் பஷீர் அகமது ஆகியோரை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement