Ad Code

Responsive Advertisement

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புவோர், ஆன் லைனில் விண்ணப்பிக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் கமிஷன் முடிவு : இது தொடர்பாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த, 15ம் தேதி துவங்கியது. இந்த முறை பொதுமக்கள் ஆன் லைனில் விண்ணப்பிப்பதை ஊக்குவிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஆன் லைனில் விண்ணப்பிக்கும்போது, தவறு ஏற்பட வாய்ப்பில்லை. ஆன் லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், www.elections.tn.gov.in/e&registration என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன் லைனில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மாநிலம் முழுவதும், 1,300 இன்டர்நெட் மையங்களுடன், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அங்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதேபோல், 2,000 இடங்களில் உள்ள, அரசு பொது சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில், தாலுகா அலுவலகங்களில் உள்ள, சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

ரூ.10 கட்டணம் : இன்டர்நெட் மையங்களில், விண்ணப்பத்திற்கு, 10 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பிரின்ட் எடுக்க, மூன்று ரூபாய் வசூலிக்கப்படும். வீட்டில் கம்ப்யூட்டர், லேப்டாப் வைத்திருப்போர், இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க விரும்பு வோர், அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement