Ad Code

Responsive Advertisement

தனியார், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் உள்ள ஏற்ற தாழ்வுகள் அகல.....

 1. அரசு பள்ளிகள் ஏழை குழந்தைகளின்  சரணாலயம்

2.  கல்விதரம் உயரும் என்று திட்டங்களை போடுகிற அதிகாரிகள், தங்களின்  குழந்தைகளையோ அல்லது பேரன், பேத்திகளையோ அரசு பள்ளியில் படிக்க
 வைக்கிறார்களா?


3. அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைவதற்க்கு, ஆசிரியர்களின்      பற்றக்குறையே  முக்கிய காரணம்

4.  1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 23 புத்தகங்களில் உள்ள பாடங்கள் அனைத்தையும் 2 ஆசியர்களை கொண்டு படிக்கும் அரசு பள்ளியில் குழந்தைகளுக்கும், 5 பாடங்களை, 5 ஆசியர்களை கொண்டு படிக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் ஒரே தேர்வு, இங்கே தொடங்குகிற ஏற்ற தாழ்வு குழந்தை, பருவத்திலிருந்தே ஆரம்பித்து வாழநாள் முழுவதும் தொடர்கிறது.


5. பள்ளிகளின் கழிவு அறையின் பராமரிப்பு இல்லாத காரணத்தால், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும் சரி, பள்ளியிலிருந்து வரும் வரை, குடி நீர் அருந்தவதைக்கூட தவிர்த்துவிடுகிறார்கள். இதனால் வரும் காலத்தில் அவர்களுக்கு வரவிருக்கும் நோய்கள்.

6.  அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட, அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை, அவர்கள் மட்டுமில்லை, அரசு சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை எவரும் முன் வருவதில்லை. வேலை மட்டும் அரசு வேலை வேண்டும் ஆனால் ?????


7. அனைத்து அரசு அலுவளர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் நான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும். அப்ப தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.

8.  1 முதல் 12-ம் வகுப்புவரை தனியார் பள்ளியில் படிப்பவர்களுக்கு BE, MBBS-ல் சேர்த்து படிப்பதற்க்கு இடம் கொடுக்க்கூடாது.

9. பாடங்கள் 4 சுவர்களுக்கு இடையே மணப்பாடம் செய்வதற்க்கு அல்ல வாழக்கை வாழ கற்று கொடுப்பதே கல்வி, அனைத்து வகையான திறமைகளை வளர்ப்பதே கல்வி, ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை ஒழித்து, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதே கல்வி. இந்த இலட்சியங்களை அடைவதற்க்கு அனைத்து பள்ளிகளையும் அரசு ஏற்று நடத்தினால் கல்வியில் ஒர் சிறந்த நாடு உருவாகும்.


கீர்த்திகா என்ற மாணவி சொல்ல கேட்டது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement