Ad Code

Responsive Advertisement

சித்த மருத்துவ படிப்புக்கு 17ம் தேதி முதல் கலந்தாய்வு

சித்த மருத்துவம் உட்பட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 17ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.

தமிழகத்தில், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், கன்னியாகுமரி - நாகர்கோவில் என, நான்கு இடங்களில், இந்திய மருத்துவம் சார்ந்த, ஆறு மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன.இதில், சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற படிப்புகளுக்கு, 325 இடங்கள் உள்ளன. இதுதவிர, 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான விண்ணப்பம், ஜூலையில் பெறப்பட்டாலும், மாணவர் சேர்க்கைக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரி களில், மாணவர் சேர்க்கைக்கு, அங்கீகாரம் கிடைத்த நிலையில், கலந்தாய்வு, 17ம் தேதி துவங்குகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லுாரி வளாகத்தில், கலந்தாய்வு, 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.இந்த படிப்புகளுக்கு, மொத்தம், 3,768 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 3,665 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தினமும், 1,000 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்பு கடிதம் அனுப்பட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காத வர்கள், இயக்குனரகத்தின் இணையதளம் மூலம் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement