Ad Code

Responsive Advertisement

விண்ணப்பிக்கலாம் : உயர்கல்வி நிறுவனங்களில் சேர பள்ளி மாணவியருக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பயிற்சி

ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவியர் அதிகளவில் சேர்வதற்காக, நாடு முழுவதும், 1,000 மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), இலவச பயிற்சி அளிக்க உள்ளது.

விண்ணப்பிக்கலாம் : 'உதான்' என்ற திட்டத்தின் கீழ், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., மற்றும் தமிழக அரசு பாட திட்டத்தின் கீழ், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவியர் (இயற்பியல், வேதியியல், கணிதம் பாடம் படிப்பவர்), பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1 மாணவியாக இருந்தால், 10ம் வகுப்பு தேர்வில், 70 சதவீத மதிப்பெண்ணுடன், கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 மாணவியராக இருந்தால், 10ம் வகுப்பில், மேற்கண்ட மதிப்பெண்ணுடன், பிளஸ் 1 வகுப்பில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நாடு முழுவதும் சேர்க்க உள்ள, 1,000 மாணவியரில், 50 சதவீதம், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவி னருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மதிப்பெண் அடிப்படையில், தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். மாணவியர், சி.பி.எஸ்.இ., இணையதளம் வழியாக, தீதீதீ.ஞிஞண்ஞு.ஞ்ணிதி.ணடிஞி.டிண விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், நேரடியாக விண்ணப்பிக்க, இரு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அங்கப்பா கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளி மற்றும் மதுரை, நரிமேடு, கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி தேர்வு செய்யப்படும் மாணவியருக்கு, இணையதளம் வழியாகவும், நேரிடையாகவும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, பயிற்சி அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement