Ad Code

Responsive Advertisement

தமிழக என்.சி.சி., மாணவர் படை குடியரசு அணிவகுப்பிற்கு தேர்வு

தமிழக அளவில் தேசிய மாணவர் படை மாணவர்களின் சிறப்பு முகாம் நெல்லையில் நடந்தது.தமிழக என்.சி.சி.,மாணவர்களின் தனித்திறன் சோதனைக்கான சிறப்பு முகாம் கடந்த ஒரு வாரமாக திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவர்களின் அணிவகுப்பு மிடுக்கு, துப்பாக்கி சுடும் திறன், கலைநிகழ்ச்சிகள், தனிநபர் திறன் உள்ளிட்டவற்றின் தேர்வுகள் நடந்தது. குரூப் கமாண்டன்ட் கோபிகிருஷ்ணா அவற்றை பார்வையிட்டார். சிறந்த மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2015 ஜனவரியில் டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தில் இருந்து 105 தேசிய மாணவ படையினர் பங்கேற்பார்கள். மாநில அளவிலான முகாம் இன்று நிறைவடைகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement