Ad Code

Responsive Advertisement

கோவை மண்டல தனியார், சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நாளை மூடல்

ஜெயலலிதாவை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி, கோவை மண்டலத்திலுள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை நாளை மூட, கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவை மண்டலத்தில், 120 தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, தமிழகத்தில் உள்ள, பல அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இந்நிலையில், கோவை மண்டலத்திலுள்ள தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், நாளை செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பின் செயலாளர் நடேசன் கூறுகையில், ''ஜெ.,வை விடுவிக்கக் கோரி, கோவை மண்டலத்தில் செயல்படும் தனியார் மற்றும் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளை, 7ம் தேதி மூட முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement