Ad Code

Responsive Advertisement

முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை

2014-15 கல்வி ஆண்டில் தொழில்கல்வி முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள், பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2014-15 ஆம் கல்வி ஆண்டில் தொழில்கல்வி (பிஇ, எம்பிபிஎஸ், பிபிஏ, எம்பிஏ, எம்சிஏ, பிஎட்) முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரகளின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த உதவித் தொகை பெற குறைந்தபட்சக் கல்வி (12ஆம் வகுப்பு, இளங்கலை பட்ட படிப்பு) தகுதியில் 60 விழுக்காடுக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவித் தொகை புதுதில்லி மைய முப்படை வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு தகுதியான பெண் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 27 ஆயிரமும், ஆண் பிள்ளைகளுக்கு தலா ரூ. 24 ஆயிரமும் வழங்கப்படும்.

2014-2015 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தி சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய, உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவள்ளுர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27663163 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement