Ad Code

Responsive Advertisement

2 சுயநிதிக் கல்லூரிகளில் 300 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம்

தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 300 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் உடனடியாகச் சேரும் வகையில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

சுயநிதியில் செயல்பட்டு வரும் சென்னை வண்டலூரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 300 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேரவுள்ள மாணவர்களின் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்-இல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை குறித்த தகவலை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது. மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையின்படியும் 300 மாணவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆண்டுக் கட்டணம் எவ்வளவு? மேலே குறிப்பிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். சேரும் பொதுப் பிரிவினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம் வகுப்பினர்) அல்லது மிகவும் பிற்படுத்தப்ட்ட வகுப்பினர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அரசின் ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டணமான ரூ.12,290-ஐ மட்டும் செலுத்தினால் போதும்; தாழ்த்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்)-பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவராக இருந்தால் அரசு எம்.பி.பி.எஸ். கட்டணமான ரூ.10,290-ஐ மட்டும் செலுத்தினால் போதும் என்று தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கல்லூரிகள் மட்டும் ஏன்? சென்னை வண்டலூரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரி, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை மாங்காட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி, சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி ஆகிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின்

மொத்தம் 750 எம்.பி.பி.எஸ். இடங்களில் நிகழ் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சிலின் புதுப்பித்தல் அனுமதி கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் புதுப்பித்தல் அனுமதிக்காகக் காத்திருக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிடம் அடிப்படைக் கட்டமைப்பு வசதி குறைபாட்டைச் சரி செய்வதாக உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு புதுப்பித்தல் அனுமதியை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும் புதுப்பித்தல் அனுமதிக்கான அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களையும் அந்தந்த அரசு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பூர்த்தி செய்யுமாறும்

இந்த இடங்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ். கட்டணத்தை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் தரவரிசைப் பட்டியல், அரசு எம்.பி.பி.எஸ். கட்டணம் ஆகியவற்றை ஏற்று வண்டலூர் தாகூர் மருத்துவக் கல்லூரி, திருச்சி எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவை மட்டுமே உத்தரவாதம் அளித்தன.

இதையடுத்து நிகழ் கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் கடைசி தினமான செவ்வாய்க்கிழமை (செப்.30), ""தாகூர், திருச்சி எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டிலும் தலா 150 மாணவர்கள் வீதம் மொத்தம் 300 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது' என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து எம்.பி.பி.எஸ். சேர்க்கை தகவல்களை அனுப்பியுள்ளது.

ஒதுக்கீட்டு ஆணை: இரண்டு (தாகூர், திருச்சி எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி) கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர உள்ள 300 மாணவர்கள், சுகாகாதாரத் துறையின் இணையதளத்தில் தங்களது ஏ.ஆர். எண்ணையும் பிறந்த தேதியையும் பதிவு செய்து ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். அசல் சான்றிதழ்கள், ஒதுக்கீட்டு ஆணையுடன் உரிய சுயநிதி மருத்துவக் கல்லூரியின் முதல்வரை உடனடியாக மாணவர்கள் சந்தித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement