Ad Code

Responsive Advertisement

பள்ளி பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் பிழை: ம.பி., அரசுக்கு கவர்னர் கடிதம்

மத்திய பிரதேச மாநில பள்ளி பாடப் புத்தகத்தில், தேசிய கீதத்தில் உள்ள வார்த்தை தவறாக அச்சிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள, அம்மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவ், அதை உடனடியாக திருத்தும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.ம.பி., மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கீதத்தில், 'சிந்த்' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'சிந்து' என, அச்சிடப்பட்டுள்ளது.
இதை கவனித்த கவர்னர் ராம் நரேஷ் யாதவ், உடனடியாக இந்த பிழையை திருத்தும்படி, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஏற்கனவே, அம்மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக பாடப் புத்தகங்களில் இதே தவறை கண்டறிந்த கவர்னர் யாதவ், அதையும் உடனடியாக திருத்தும்படி, அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement