Ad Code

Responsive Advertisement

விடுமுறை கால சிறப்பு வகுப்புஆர்வம் காட்டாத மாணவர்கள்

விடுமுறை கால சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர் வருகை குறைந்ததால்,
ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

பள்ளி நாட்களில் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறைகளிலும், சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது; இதில், காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட நாட்களை தவிர்த்து, ஐந்து நாட்களில் மட்டும் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நாட்களில், அடுத்து வரும் புதிய பாடங்களை நடத்தவும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஆசிரியர்கள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த 27ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தினமும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு போன்றவை நடந்து வருகிறது. இதனால் சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், புதிய பாடங்களை நடத்தாமல், ஏற்கனவே நடத்திய பாடங்களை மீண்டும் படித்து பார்க்குமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள சூழலில், சிறப்பு வகுப்புக்கு மாணவர் வராததை கண்டிக்கவோ, அவர்களை வருமாறு கட்டாயப்படுத்தவோ முடியவில்லை. "பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடப்பதால் பெற்றோரும், அவர் களை அனுப்பி வைக்க தயங்குகின்றனர். இதனால் திட்டமிட்டபடி, சிறப்பு வகுப்பு நடத்த முடியவில்லை,' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement