Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகலே போதுமானது!!

மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை கைவிட்டு, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப்பெறுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பம் பெறுவதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். நகர்ப்புற மாணவர்களை காட்டிலும், கிராமப்புற மாணவர்களுக்கு இது கூடுதல் சிரமத்தை அளிக்கிறது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும்யு.ஜி.சி., சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவர்களின்கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை கைவிட்டு, மாறாக, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, இந்த உத்தரவை அமல்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை அனுப்பி வைக்குமாறும், பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement