Ad Code

Responsive Advertisement

சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் பட்டியல் வெளியீடு - தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் தகுதி குறித்து இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ள லாம்

சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலை  ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 1000  ஆசிரியர்கள் தொடக்க கல்வித்துறையில் நியமிக்கப்படுவார்கள். தொடக்க  கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமனம்  செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு  வெளியிட்டது. இந்த நியமனங்கள் 2012-2013ம் ஆண்டு தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களில் விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்யவும்  ஏற்பாடு செய்திருந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம்  தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றில் காலியாக  உள்ள இடங்கள் குறித்தும் ஆகஸ்ட் 10, 26, 27 ஆகிய தேதிகளில்  பட்டியல் வெளியானது. மேலும், சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான  ஆசிரியர் பணியிடங்களில் அதற்கான ஆசிரியர்களை நியமனம்  செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலும்  வெயிடப்பட்டது. 

சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர்கள் 1000 பேர் பிசி, எம்பிசி  நலத்துறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சான்று சரிபார்ப்பு  நடத்திய பிறகே சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் அந்தந்த  துறையில் நியமிக்கப்படுவார்கள். இதையடுத்து மேற்கண்ட  பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய  தளத்தில்நேற்று வெளியிட்டது. சிறுபான்மை மொழிப் பாடங்களில்  தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் தகுதி குறித்து இணைய தளத்தில்  சரிபார்த்துக் கொள்ள லாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement