Ad Code

Responsive Advertisement

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க…’ டிப்ஸ்

* பட்டாசு வெடிக்கும்போது உடையில்தீப்பற்றிக் கொண்டால் உடனே ஓடுதல் கூடாது.தரையில் படுத்து உருண்டு புரளவேண்டும். அப்போதுதான் தீ அணையும். ஓடுவதுதீயை அதிகரிக்கவே செய்யும்.

* தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீர் ஊற்றி, மெல்லியதுணியால் மூடி உடனே மருத்துவமனைக்குஅழைத்துச் செல்ல வேண்டும்.

* தீக்காயம் உள்ள இடத்தில் துணியால்அழுத்தி துடைக்கக் கூடாது. மேலும் இங்க்,புளித்த மாவு, ஆயில் போன்றபொருட்களை காயம் பட்ட இடத்தில்போடக் கூடாது.

* தீயணைப்புத் துறை நிலையங்களின் எண்கள்,மருத்தவர்களின் தொலைபேசி எண்களை தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. அவசரத்தேவைக்கான எண்களை எழுதி வைத்துவீட்டில் சுவற்றில் ஒரு இடத்தில் ஒட்டிவைப்பது நல்லது.

* குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்கஅனுமதிக்கக் கூடாது. பெரியவர்கள் உடன்இருப்பது பாதுகாப்பானது.

* பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது ஆபத்தானது. நமக்கே தெரியாமல் அதில்நெருப்பு பட்டுவிட்டால் ஆபத்தாகிவிடும்.

* நெரிசலான சந்துகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியிலும் சரவெடிகள் வெடிப்பது ஆபத்தானது.

* பட்டாசுகள் வெடிக்கும்போது தளர்ந்த ஆடை, நைலான்,பாலிஸ்டர் துணிகளை உடுத்திக்கொள்ளக் கூடாது.இறுக்கமான ஆடைகள், பருத்தி ஆடைகள்மட்டுமே அணிய வேண்டும்.

* பட்டாசு கொளுத்துவதற்கு முன்புஒரு வாளியில் தண்ணீரை அருகிலேயே வைத்திருக்கவேண்டும். எரிந்து முடிந்த மத்தாப்புகம்பி, பட்டாசுகளை நீர் உள்ள வாளியில்அல்லது உலர்ந்த மண்ணில் போட்டுமூடி வைக்க வேண்டும்.

* பட்டாசு வெடிப்பதற்று தீப்பெட்டியைப்பயன்படுத்த வேண்டாம், நீளமான ஊதுபத்திகளைப் பயன்படுத்தவேண்டும்.

* ராக்கெட் போன்ற வெடிகள் அதிகவிபத்துகளை ஏற்படுத்தும். அதனால் ராக்கெட்டை வெடிக்காமல்இருப்பது நல்லது. அதை மீறிவெடிக்க விரும்புகிறவர்கள் மைதானங்களில் வெடிப்பது நல்லது.

* செருப்புகளை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

* பட்டாசுகளை பாட்டில்களில் வைத்து வெடிப்பது அபாயகரமானது.உடையும் கண்ணாடி சில்லுகள் உடலில்காயங்களை ஏற்படுத்துவதோடு நம் அருகில் இருப்பவர்களுக்கும்ஆபத்தை விளைவிக்கும்.பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதைவிட, வெடிக்காமல்இருப்பதே நல்லது. பட்டாசுகளால் ஏற்படும்புகையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு, பட்டாசுபுகையால் ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் சம்பந்தப்பட்டநோய்கள் ஏற்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement